மணத்தக்காளியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
மணத்தக்காளி உடல் ஆரோக்கியத்தை கூட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலையிலிருந்து சாறு பிழிந்து எடுத்து இந்துப்பு போட்டு வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் சிறுநீர் தடை, கீழ்வாயு போன்றவை முற்றிலுமாக குணமடையும்.
மேலும் மணத்தக்காளி இலையை நன்கு காய வைத்து பின் அதனை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட கல்லீரல், மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும். மார்புவலி, சளி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இத்தகைய மருத்துவகுணம் கொண்ட மணத்தக்காளியை நாமும் உண்டு ஆரோக்கியத்தை பெருக்கி பயன்பெறுவோம்.