ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் ‘இதுதான் எல்லாத்துக்கும் காரணம்’ என சிம்பு கூறியுள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’ . இந்த படத்தில் நிதி அகர்வால் ,பாரதிராஜா ,காளி வெங்கட், நந்திதா, முனீஷ்காந்த் ,யோகி ,பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எக்மோரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஈஸ்வரன் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிம்பு இத்தனை நாள் நான் எப்படி இருந்தேன்? இப்படி எப்படி மாறினேன் ?இந்த படம் எப்படி உருவானது? என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை . இறைவனுக்கு மட்டும் தான் அது தெரியும் . எங்கு பார்த்தாலும் நெகட்டிவா இருக்கு. யாரைப் பார்த்தாலும் போட்டி ,பொறாமை, குறை சொல்வது என இருக்கிறார்கள் .
அட்வைஸ் சொல்வதை நிறுத்த வேண்டும் . நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அட்வைஸ் கேட்கிறத நிறுத்தி கொள்ளுங்கள் . ஒரு சமயத்தில் என் வாழ்வில் நான் கஷ்டப்பட்டேன். மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதனால்தான் என் உடல் எடை கூடியது. படப்பிடிப்புகளுக்கு செல்ல முடியவில்லை . இறைவன் உள்ளத்தில் தான் இருக்கிறார் . என் உள்ளத்தை சரி செய்தேன். இப்போ எல்லாம் நன்றாக நடக்கிறது . எல்லோரிடமும் அன்பாக இருங்கள் . ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் . பேச ஒன்றுமில்லை இனி செயல் தான் அடுத்தடுத்து என்னுடைய பல படங்கள் வெளியாக இருக்கிறது. ‘ஈஸ்வரன்’ படக் குழுவினருக்கு நன்றி’ என கூறியுள்ளார்.