Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல உடல்நல கோளாறுகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுட்டை பகுதியில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமன் பத்து வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதில் இவருக்கு பல உடல்நல கோளாறுகள் இருந்து வந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த ராமன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |