மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு சிவன் கோவில் தெருவில் ஆதிகேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோனிஷா என்ற பெண்ணை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மோனிஷாவுக்கு நர்சிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் தன்னால் அவ்வளவு செலவு செய்ய இயலாது என ஆதிகேசவன் மறுத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆதிகேசவன் தனது அக்காள் வீட்டு விசேஷத்துக்கு நகைகள் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மோனிஷா தன்னை படிக்க வைக்க செலவு செய்யாத கணவர் அவரது அக்காள் வீட்டுக்கு செலவு செய்கிறார் என துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.