தீராத வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள சிறு கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வி விஷத்தை எடுத்துக் குடித்துள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு தமிழ்ச்செல்வியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.