வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள லிங்க் ரோடு பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த நரேந்திரன் திடீரென காந்தி சாலையில் இருக்கும் ஒரு வணிக வளாக கட்டிடம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.