Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்…. மாணவர்களுக்கு விழிப்புணர்வு…. ரயில்வே போலீஸின் செயல்….!!

ஐ.டி.ஐ மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் சார்பாக அரசு ஐ.டி.ஐ-யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே கேட்டில் செல்போன் பேசிக் கொண்டு தண்டவாளத்தை கடக்க கூடாது எனவும், தண்டவாளத்தை கடந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கி கூறியுள்ளனர்.

இதனையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மிகவும் அவசியம் எனவும், பயணம் செய்யும் போது ரயில்களின் ஜன்னல் கம்பி மற்றும் படியில் தொங்கிய படி செல்லக் கூடாது என்றும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |