Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாங்க ஏற்கனவே சொல்லிட்டோம்… பறிபோன மாணவன் உயிர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கி 9 – ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 – ஆம் வகுப்பு படிக்கும் அகிலன் என்ற மகன் இருந்துள்ளான். அகிலனுக்கு 2 சகோதரிகள் இருக்கின்றனர். இந்நிலையில் அகிலன் தனது வீட்டிற்கு எதிரே உள்ள வயல் வெளியில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளான். இதனையடுத்து வயலில்படும்படி உயர் மின்னழுத்த கம்பி தாழ்வாக தொங்கியுள்ளது. அப்போது அதனை பார்க்காத அகிலன் அந்த கம்பியில் தவறி விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து மின்சார வாரியத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்சார வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனால் அகிலனின் குடும்பத்தினர்கள் மிகவும் கோபமடைந்து மின் கம்பியை பழுது பார்க்க தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்யாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கோட்டாட்சியர் சுகந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட அகிலனின் குடும்பத்தினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் கம்பியை சரி செய்யாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பின் அகிலனின் உறவினர்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.  இதனைதொடர்ந்து உறவினர்கள் அகிலனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |