மாணவன் உடல் நிலை பாதிப்பால் தற்கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .
நெல்லை மாவட்டத்தில் உள்ள கள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல். இவர் அஞ்சு கிராமத்திற்கு அருகே உள்ள குமாரபுரம் தோப்பூரில் தற்போது குடும்பத்தினரோடு வசித்துவருகிறார். அந்தோணி மைக்கேலின் மகன் வின்சென்ட் (14) . இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வி ன்சென்ட்டிற்க்கு உடல்நிலை பாதிப்படைந்து சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் உடல்நிலை பாதிப்பால் தன்னால் படிக்க முடியவில்லை என்று மனமுடைந்து காணப்பட்டுளளார். அவரது குடும்பத்தினர் அவரை ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் வாழ்வில் விரக்தி அடைந்த வின்சென்ட் விஷம் குடித்ததால் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரே குடும்பத்தினர் மீட்டு ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் வின்சென்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்குஅனுப்பிவைத்ததோடு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.