Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் சிரமம்…. மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் சிரமப்பட்டு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சாந்திபுரம் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வேத வியாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் வேத வியாஸ் வயிற்றுப் வலி காரணமாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வேத வியாஸ் வீட்டில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வேத வியாசை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேத வியாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |