Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு காரணமா இருக்கும்…. என்ஜினீயரிங் மாணவன் பரிதாபம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

என்ஜினீயரிங் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரும்பேரி அம்பேத்கர் நகரில் வல்லரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். ஆனால் தற்சமயம் ஊரடங்கு என்பதனால் வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்மணபுதூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள புளியந்தோப்பில் வல்லரசு தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பொது மக்கள் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வல்லரசு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வல்லரசு கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |