Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாடகை வீடு பிடிக்கல… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… மாணவர் எடுத்த முடிவு….!!

சேலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் 20 வயதுடைய சரண். இவர் சேலத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரணின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து பின்வருமாறு கூறினர். சரணின் தந்தைக்கு போதிய வருமானம் இல்லாததால் அதே பகுதியில் குறைந்த வாடகைக்கு வீடு பார்த்துள்ளார். இது சரணக்கு  பிடிக்கவில்லை. இதனிடையே நேற்று காலையில் அவருடைய தாய்-தந்தை இருவரும் அந்த வீட்டிற்கு சென்று பால் காய்ச்சி உள்ளனர். இந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறினர் . மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |