பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிகோட்டை பகுதியில் நடன சிகாமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இருந்து 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் தற்போது வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் மணிகண்டன் குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இல்லாதபோது தூக்கில் தொங்கியுள்ளார்.
அதன்பின் வீடு திரும்பி அத்தை தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மணிகண்டனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அத்தை சுசீலா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்