செல்போனை பார்ப்பதற்கு பெற்றோர் அனுமதிக்காததால் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்தார். இதில் மோகன்ராஜ் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக மோகன்ராஜ் கடந்த 2 வருடங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் மூலம் அவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக மோகன்ராஜூக்கு அவருடைய தந்தை செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் மோகன்ராஜ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து செல்போனையே பார்த்துக் கொண்டு இருந்தார். இதனால் அவருடைய தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்ராஜிடம் இருந்து செல்போனை வாங்கியுள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மோகன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மோகன்ராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.