பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அலை மோதியதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதுமாக தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையும் மற்றும் கல்லூரிகள் திறக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளி கல்லூரிக்கு முககவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி சென்றுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்களுக்கு சனிடைசர் மூலமாக கைகளை சுத்தம் செய்த பின்னரே ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்தால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து விடுமுறை நாட்களில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பேருந்து நிலையங்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலை மோதியதால் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது.