பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்து பாடி தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் கார்த்திக்கும், ஜெகதீஸ்வரனும் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அதன்பின் ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பாடத்தில் சந்தேகம் இருப்பதால் அதை கேட்பதற்காக 2 மாணவர்கள் பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
இதனையடுத்து காலையில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்கு சென்று கேட்ட போது அவர்கள் ஏற்கனவே வீட்டிற்கு சென்று விட்டதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். பின்னர் பதற்றமடைந்த பெற்றோர்கள் இரவு முழுவதும் தேடி பார்க்கும் போது சித்தேரி பகுதியிலிருக்கும் குளத்தின் அருகாமையில் சைக்கிள் நின்றதை பார்த்துள்ளனர். அதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல்துறையினருக்கு மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பிறகு தீயணைப்பு துணையினர் குளத்தில் இறங்கி அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஜெகதீஸ்வரன், கார்த்திக் ஆகிய 2 மாணவர்களின் சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். பிறகு 2 மாணவர்களின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.