Categories
உலக செய்திகள்

மாணவர்களை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்… நைஜீரியாவில் பரபரப்பு…!!!

நைஜீரியா நாட்டில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் உள்ள தலைநகரான அபுஜாவில் பயங்கரவாத அணிகளான அல்கொய்தா, ஐ.எஸ்,  பண்டிட்ஸ், போகோ ஹராம் போன்ற அணிகள் குழுக்களாக இணைந்து ஆதிக்கம் செய்து வருகின்றது. இதுபோன்ற பயங்கரவாத குழுக்களிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயங்கரவாத தாக்குதலினால் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் ஆகிய ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத குழுக்கள் சில சமயங்களில் பள்ளிக் கூடங்களுக்கு சென்று அங்குள்ள மாணவ மாணவிகளை கடத்திச் சென்று பயங்கரவாத செயல்களுக்கு ஈடு படுத்துவதற்கும் மற்றும் மாணவ மாணவிகளை பயன்படுத்துகின்றனர்.

இச்சூழலில் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியான சம் ஃ பரா மாகாணத்திலுள்ள ஒரு பள்ளிக்கு அருகே மாணவர்கள் தங்குவதற்கான பள்ளி விடுதி அமைந்திருந்தது. திடீரென்று அந்த விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை, பயங்கர ஆயுதங்களுடன் சென்ற பண் டிட்ஸ் பயங்கரவாத குழுவினர் அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றனர். இச்சம்பவத்தை அந்த மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளரான ஜிலானி பப்பா  உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Categories

Tech |