Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. 20 ஆண்டுகளாக அரியர் இருக்கா?…. உங்களுக்கான அரிய வாய்ப்பு…..!!!!

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு  சில மகிழ்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2002- 2003 ஆம்  ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்ததுள்ளது.

அதன்படி அரியர் வைத்துள்ள மாணவர்கள் இன்று முதல் http://coe1.annauniv.edu என்ற இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான தேர்வு அட்டவணை, தேர்வு முறை மற்றும் தேர்வு மையம் போன்றவை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |