தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கிடைத்ததால் விடுமுறை மொத்தமாக மூன்று நாட்கள் மாறியது. இதனால் வெளியூர் செல்வதற்கு பெரிது உதவிகரமாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் திங்கள் அன்று இரவு திரும்பி விட வேண்டும் விரும்புவர். அப்படி செய்தால் முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்து விடும். நெரிசல் அதிகமாகி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். எனவே தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒருநாள் விடுமுறை விட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை வெளியாகவில்லை. இதன் காரணமாக திங்களன்று இரவே திரும்புவதற்கு பொதுமக்கள் திட்டமிட்டு வருகின்றனர் இந்நிலையில் சற்றே ஆறுதல் அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது தனியார் பள்ளிகள் பலவும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை அறிவித்துள்ளது. இது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் ஒருநாள் தாமதமாக புறப்பட்டு செல்லலாம் தீபாவளி இரவை நிம்மதியாக கழிப்பது மட்டுமில்லாமல் மறுநாள் நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ள முடியும். இதனையடுத்து அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? இல்லை எனில் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர் தீபாவளி விடுமுறை சரியாக திட்டமிட வேண்டி உள்ளது. மேலும் இதுவரை கூடுதல் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகாது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது