Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறை….!!!

தமிழகத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள்  வழங்குவது குறித்து சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா  காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்த தமிழக அரசு காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவீதமும் வருகைப் பதிவேட்டை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பல பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாள்களை சரியாக பராமரிக்காததால் மாணவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்குவதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

இந்நிலையில் சிபிஸ்சி யில் வழங்குவதைப் போல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏ பி மற்றும் சி என்ற மூன்று கிரேடுகளில் மதிப்பெண்களை வழங்கலாமா என்று அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகளை உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களின் அடிப்படையில் எப்படி நிறைவேற்றுவது என்பதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Categories

Tech |