முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை மாவட்ட உதவி திட்ட அலுவலர் வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி டி. வியில் ஒளிபரப்பாகும் வகுப்புகளுக்கான கால அட்டவணை போன்றவற்றை கொடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, பட்டதாரி ஆசிரியர் வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கள்ளிக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வகுப்புகள் கால அட்டவணை வழங்கப்பட்டது.