Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விலையில்லா சைக்கிள் வழங்கல்…. சிறப்பாக நடைபெற்ற விழா…. கலெக்டரின் செயல்….!!

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 37 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12,490 மாணவ-மாணவிகளுக்கு 6.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கியுள்ளார்.

அதன்பின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கியுள்ளார். பின்னர் அவர் கூறியதாவது, தமிழகத்தில் படிப்பு மட்டுமின்றி நலன் தரும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது எதிர்காலத்தினை ஒளிமயமானதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |