மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள துப்பாக்குடி பகுதியில் நயினார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து நயினாருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அவர் வேலைக்கு செல்லவில்லை.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது மனைவி மாரியம்மாள் கோபத்தில் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்நிலையில் நயினார் வாழ்க்கையை வெறுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நயனாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.