மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழ ஆம்பூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வி அடிக்கடி செல்போனில் விளையாடி வந்துள்ளார். இதனைப் பார்த்த செல்வியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த செல்வி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து காவல்துரையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வியின் உடலை உடனடடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.