மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் அரசு பள்ளியில் படிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மாணவி உசிலம்பட்டியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியை தேடி காவல்துறையினர் உசிலம்பட்டிக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த மாணவியுடன் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகராஜ் என்பவர் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.