10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசை பயிற்சி பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இசை பயிற்சி பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி தனது உறவினர் மகளான 17 வயது மாணவி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டுட்டோரியல் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். மேலும் தந்தையை இழந்த அந்த மாணவியை பாரதி காரில் பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்றுவிட்டு மாலையில் வீட்டில் கொண்டு சென்று விடுவார்.
இந்நிலையில் வழக்கம்போல் காரில் அழைத்துச் செல்லும்போது பாரதி மாணவியிக்கு பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாரதியை போக்சோ சட்டத்தின் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.