Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மதுபோதையில்… கணவனின் வெறிச்செயல்…. மனைவிக்கு நடந்த கொடூரம்..!!

மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் கலில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாக்குமட்டை விற்பனை செய்யும் தொழிலாளியாக இருக்கின்றார். இவருடைய மனைவி ஜெரினா மீன் கடைகளுக்கு அதை வெட்டி கொடுக்கும் பணி செய்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களும் திருமணம் முடிந்து வெளியூர்களில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

மேலும் கலிலின் மகன் தர்மபுரியில் தனியாக வசித்து வருகின்றார். இதனால் புதுப்பேட்டையில் கலில் மற்றும் அவரது மனைவி ஜெரினா இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதில் கலிலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குடிபோதையில் இருந்த கலில் தனது மனைவி ஜெரினாவுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கலில் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து தனது மனைவியின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதனால் ஜெரினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலிலை கைது செய்தனர். அதன்பின் காவல்துறையினர் ஜெரினாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலிலிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |