Categories
மாநில செய்திகள்

“மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம்”…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணையில் மாணவனை கைது செய்ததற்கு போலீசை கண்டித்து நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன் போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டி இருப்பதால் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம்பெற வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்  குறிப்பிட்டுள்ளனர்

Categories

Tech |