பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியும் அதே வகுப்பில் படிக்கும் பள்ளிப்பட்டு பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி திடீரென காணாமல் போனதாக அவரது தாயார் பள்ளிப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமி குறித்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுவன் அந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து மாணவி தனது தாயாருடன் செல்வதாக கூறியதால் காவல்துறையினர் அவரை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர்.
அதன்பின் சிறுவனை சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இது குறித்த வழக்கு விசாரணை திருவள்ளூர் சிறார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார். அதில் சிறுவன் ஒரு வருடம் முழுவதும் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் பணி செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்கினார். இதனையடுத்து கர்ப்பிணியாக இருந்த சிறுமி விசாரணை நடந்து வந்த நிலையில் குழந்தை பெற்றெடுத்தார். இதனால் சிறுமியை அவரது உறவினர்கள் மாணவனின் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர்.