பிளஸ்டூ மாணவியை கடத்திய தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் 17 வயது மாணவியை ராட்டினமங்கலம் கிராமத்தில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளியான முத்துக்குமரன் என்பவர் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆரணி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துக்குமரனையும் மாணவியையும் தேடி வந்தனர். இந்நிலையில் மாணவியை கடத்திய முத்துக்குமரனை காவல்துறையினர் பிடித்தனர். இதனைதொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆரணி அனைத்து மகளிர் காவல்துறையினர் முத்துக்குமரனை கைது செய்துள்ளனர்.