Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த போது…. மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. கைது செய்த காவல்துறையினர்….!!

10 – ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் 10 – ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் ஆவரங்காடு பகுதியில் கல்லூரி மாணவரான அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அருண்பாண்டியனுக்கும் 10 – ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை அருண்பாண்டியன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த மாணவியின் தாயார் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்பாண்டியனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |