ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் காணாமல் போன பெண்ணை அவரது கணவர் இன்று வரை கடலுக்கடியில் தேடிக் கொண்டிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வந்தனர். அந்த சுனாமியின் போது, Yasuo Takamatsu என்பவரது மனைவி yuko அங்குள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கும் வங்கியில் வேலை செய்து வந்தார். மலைப்பகுதியில் இருப்பதால் தனது மனைவிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்று Yasuo நினைத்திருந்தார்.
ஆனால் அந்த வங்கியில் வேலை செய்தவர்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் அனைவரும் வங்கியை விட்டு வெளியேறிய போது சுனாமியில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். மறுநாள் சுனாமியின் தாக்கம் குறைந்த பிறகுதான் Yasuo -விற்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. வங்கி அமைந்திருக்கும் பகுதியில் வசிக்கும் பத்தாயிரம் பேரில் 800க்கும் அதிகமானவர்கள் சுனாமியால் உயிரிழந்தனர்.
அவர்களில் சில பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தது. அதில் yuko -வின் உடல் இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை Yasuo தனது மனைவியை கடலுக்குள் நீந்தி சென்று தேடிக் கொண்டிருக்கிறார். சுனாமியில் உயிரிழந்தவர்களின் உடைமைகள் கடலுக்கடியில் அவருக்கு கிடைத்தது. ஆனால் அவரது மனைவி yuko-வின் உடலோ அவரது உடமையோ Yasuo -விற்கு கிடைக்கவில்லை. இருப்பினும் நான் என்னுடைய உயிர் இருக்கும் வரை அவளைத் தேடிக் கொண்டே தான் இருப்பேன் என்று Yasuo நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.