17 வயதுடைய மாணவியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருகோகர்ணம் பகுதியில் சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ்-2 படித்து வரும் மாணவியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதன்பின் இது பற்றி குடும்பத்தாரிடம் கூறி தகராறில் ஈடுபட்டதோடு, மாணவியை தாக்கியுள்ளார்.
இது குறித்து மாணவியின் தாய் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிங்கமுத்துவை கைது செய்துள்ளனர்.