மாணவியை திருமணம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலகடம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவரும் நாமக்கல் மாவட்டம் குள்ளநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் உறவினர்கள் ஆவர். இதில் சிறுமி ஒலகடம் பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்களில் சிறுவன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி சிறுவன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து மாணவியை சிறுவன் கடத்திச் சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சிறுவனை வலைவீசி தேடி வந்தனர். அப்போது சிறுவன், மாணவியை திருமணம் செய்து கொண்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் 2 பேரையும் காவல்துறையினர் மீட்டனர். இதில் சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்ததோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.