Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடூரம்…. தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் செய்த செயல்…. கல்வி அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் அரசு பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் உயிரியல் ஆசிரியராக திருமலை மூர்த்தி வேலை பார்த்து வந்தார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் பெறப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருமலை மூர்த்தியை போக்சோ சட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து கோபியில் உள்ள சிறைச்சாலையில் திருமலை மூர்த்தி அடைக்கப்பட்டார். இந்நிலையில் பாலியல் தொல்லை தொடர்பாக ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரான கணேசனை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டும் மாணவ-மாணவிகள் போராட்டத்தை மேற்கொண்டனர். அதன்பின் தலைமை ஆசிரியர் கணேசனை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரியான ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியரான திருமலை மூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் சமர்ப்பித்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியர் திருமலை மூர்த்தியை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரியான ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |