Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் உடற்பயிற்சி சேலஞ்ச்… தோற்றுப்போன ஜெயம் ரவி… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

நடிகர் ஜெயம்ரவி மகளிர் தினத்தில் தனது மனைவியுடன் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் பூமி திரைப்படம் வெளியானது. பொங்கலுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் க்யூட்டான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவரது மனைவி ஆர்த்தி ஒரு சிறு உடற்பயிற்சியை செய்து காட்டுகிறார். ஆனால் அதை முயற்சி செய்த ஜெயம் ரவி தோற்று விடுகிறார். மேலும் ஜெயம் ரவி இந்த வீடியோவுடன் ‘பெண்களால் எதையும் செய்ய முடியும் . உங்கள் அன்புக்குரியவருடன் இதை முயற்சிக்கவும். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |