சீனா தன் அதிகாரத்தைக் காட்டும் விதமாக மாண்டரினில் புத்தகங்களை மொழிபெயர்க்க திபெத் மதகுருக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது.
சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். கிங்காய் மாகாணத்தில் கடந்த மாதம் சீனா அரசு மூன்று நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பின்னர், “திபெத்தில் உள்ள புத்த துறவிகள் மற்றும் பெண் பிக்குணிகள் சீன மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். திபெத் மதகுருக்கள் பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழி பெயர்க்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து சீனா திபெத்துக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கையை சீன அரசு, திபெத் பிராந்தியத்தில் கட்டுப்பாட்டை இறுக்கும் விதமாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சீன நாட்டு அரசு கடந்த மாதம் ‘இனி திபெத் பள்ளிகளில் சீன மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும்’ என உத்தரவிட்டது. இதற்கு எதிராக போராடிய திபெத் மாணவர்கள் இருவரை சீனா அரசு கைது செய்தது.
இது குறித்து பிரபல வானொலி வெளியிட்ட செய்தியில், “திபெத்தில் உள்ள புத்தகங்களை எல்லாம் மாண்டரின் மொழிக்கு மாற்றச் சொல்வது சரி. தற்போது புத்தகங்களை யார் மொழிபெயர்ப்பது என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது. சீனாவின் இந்த திட்டத்திற்கு பின்னால் எந்தவிதமான நல்லெண்ணமும் இருப்பதாகத் தெரியவில்லை. திபெத் தன்னாட்சி நாட்டில் சீன அரசு தனது அதிகாரத்தைக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்து வருகிறது’ என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.