ஹெல்மட் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது உயர்நீதிதிமன்றம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.அந்த விதி முழுமையாக அமல்படுத்துங்கள். அமுல்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து ஒரு வருடம் ஆகியும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிருப்தி அடைந்த நீதிபதிகள் இது குறித்த அறிக்கையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தமிழக அரசை குற்றம் சாட்டினர் .
ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயர்ந்தவர்கள் விவரங்களை நீதிமன்றம் கேட்டும் அதிகாரிகள் விவரங்களை தரவில்லை. ஹெல்மெட் விவகாரத்தில் முறையாக தகவல் தராத உயர் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த உயர் நீதிமன்றம் , ஹெல்மட் அணியாமல் சென்றவர்கள் , விபத்துக்கள், பலியானவர்கள் குறித்து பதிவான வழக்குகளின் அறிக்கையை மாவட்ட வாரியாக தமிழக டிஜிபி தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.