Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு தேதி ஒத்திவைப்பு

தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீட்டின் அட்டவணை என்பது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி மே 23ம் தேதியோடு நிறைவடையும். ஏப்.2ம் தேதியில் இருந்து தனியார் பள்ளிகளில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் வெளியிடப்படும்.

அதன் பிறகு மே 3ம் தேதியில் இருந்து மே 18ம் தேதி வரை அதற்கான விண்ணப்பங்களை விநியோகம் செய்யும் பணிகள் நடைபெறும். இறுதியில் தனியார் பள்ளிகளுக்கான சேர்க்கை, குழுக்கள் முறையில் நடைபெற்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான ஜி.ஒ.என்-9 என்ற அரசாணையும் வருடந்தோறும் வெளியிடப்படும். ஆனால் தற்போது இது தொடர்பான அட்டவணையை வெளியிட்டால் மாணவர்களின் பெற்றோர்கள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதனை கருத்தில் கொண்டு ஜி.ஓ.என் -9 அரசாணைப்படி தற்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளமுடியாது எனவும், அதனால் அட்டவணை வெளியிடும் தேதியை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கை மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, அரசும் அனுமதி வழங்குயுள்ளது. எனவே, இந்த அட்டவணை முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், இதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |