சந்தையில் அதிக விலைக்கு விற்கும் மியாசாகி மா மரங்களை பாதுகாக்க மத்தியபிரதேச நபரொருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய மியாசாகி மாம்பழங்கள் கடந்தாண்டு சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூபாய் 2.70 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜபல்பூரில் வசிக்கும் சங்கல்ப் பரிஹாஸ் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சென்னையிலுள்ள ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த நபர் ஒருவர் பரிஹாஸிற்கு 2 மா கன்றுகளை கொடுத்துள்ளார்.
அதனை ஏற்றுக்கொள்ள பரிஹாஸ் தன்னுடைய வீட்டில் அந்த மா கன்றுகளை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து நன்றாக வளர்ந்த அந்த மரத்தில் காய்த்த மாம்பழங்கள் அனைத்தும் ரூபி சிவப்பு நிறத்தில் இருந்ததை கண்டு பரிஹாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் இந்த ஜப்பானிய மியாசாகி மாம்பழங்களை பாதுகாக்க பரிஹாஸ் 4 பாதுகாப்பு பணியாளர்களையும், 6 வேட்டை நாய்களையும் பணியில் அமர்த்தியுள்ளார்.