Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாங்காய் இருக்கா? அப்போ இந்த ரசம் செய்யுங்க…!!

மாங்காய் ரசம் செய்ய தேவையான பொருள்கள்:

மாங்காய்த் துருவல்               –  அரை கப்
துவரம் பருப்பு                           – 2 டீஸ்பூன்
மிளகு                                            – 2 டீஸ்பூன்
தக்காளி சாறு                             –  கால் கப்
கடுகு, பெருங்காயத்தூள்     – அரை ஸ்பூன்
எண்ணெய், உப்பு                      –  தேவைக்கேற்ப
சீரகம்                                              – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி                             – சிறிதளவு
கருவேப்பிலை                          – சிறிதளவு                                                                                                              தண்ணீர்                                        -1கப்

செய்முறை:

மிக்ஸி ஜாரை எடுத்து அதில் துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்துக் எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, மாங்காய் துருவலை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். பின்பு வேக வைத்த மாங்காய் துருவல் நன்கு ஆறியதும் அதை  மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தக்காளி சாறு, உப்பு, அரைத்த துவரம் பருப்பு பொடியுடன், சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அதனுடன் 1 கப் தண்ணீர், மாங்காய் துருவலையும் சேர்த்து 2 நிமிடம் நன்கு  கொதிக்க விடவும்.

இறுதியாக அடுப்பில் கடையை வைத்து சிறிது எண்ணெய், கடுகு போட்டு தாளித்து, பின் மாங்காய் ரசத்தில் ஊற்றி சிறுது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மாங்காய் ரசம் ரெடி.

Categories

Tech |