மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் மோடி அரசையும், மோடியையும் நம்பி ஒரு பிரயோஜனமும் கிடையாது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் குறித்து பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வரும் ? என்பதை ஜைக்கா நிறுவனமும், ஜப்பான் பிரதமரும் தான் கூற வேண்டும். ஆனால் அவர்கள் மதுரையில் எய்ம்ஸ் வருகின்ற 2026-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று தெளிவாக கூறி விட்டார்கள்.
எனவே எய்ம்ஸுக்காக நாம் அனைவரும் 2026 வரை காத்திருக்க வேண்டியது அவசியம். ஆகவே ஜைக்கா நிறுவனத்தையும், ஜப்பான் பிரதமரையும் முழுவதுமாக நம்புவோம். அதேசமயம் மோடி அரசையும், மோடியையும் நம்பி ஒரு பிரயோஜனமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
மேலும் அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் எதிர்ப்புகளுக்கு இணங்க ஜவுளிக்கான ஜி.எஸ்.டி உயர்வு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை வாபஸ் பெறுவது கவுன்சிலின் கடமையாக உள்ளது. எனவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை உறுதிப்பட செய்வார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.