Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள் சாதனை…. சிறப்பாக நடைபெற்ற போட்டி…. ஆசிரியர்கள் பாராட்டு….!!

அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 32 புள்ளிகள் பெற்று மாநில கபடி போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் மாநில கபடி போட்டி அமெச்சூர் கபடி கழகம் சார்பாக நடைபெற்றுள்ளது. இதில் வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் பல மாவட்டங்களில் இருந்து 25 அணிகள் பங்கேற்றுள்ளது. இவற்றில் வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் மற்றும் அப்துல் கலாம் அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அரசு மேல்நிலைப்பள்ளி 32 புள்ளி பெற்ற முதல் இடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. பின்னர் சிறந்த விளையாட்டு வீராங்கனை புவனேஸ்வரி கோப்பையை அவர்களுக்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவிகளை தலைமை ஆசிரியர் பி. நந்தினி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |