Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிரப்ப வேண்டும்…. பல்வேறு தீர்மானங்கள்…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்….!!

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட மாநாடு நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ராஜா சிதம்பரம் மற்றும் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனையடுத்து கூட்டத்தில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் எனவும், இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான வாரிசு வேலை வழங்க வேண்டும். பின்னர் 65 ஆயிரத்திற்கும் அதிகமான சாலை பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், தர ஊதியம் 1,900 ரூபாயாக உயர்த்தி அன்ஸ்கில்டு ஊழியர்களாக அறிவித்து விட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Categories

Tech |