தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அணிக்கு குறைவான இடங்கள் திமுக கொடுக்க இருப்பதாக நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தங்களுக்கு 30க்கும் மேற்பட்ட தொகுதியை வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறது. ஏற்கனவே போன சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது.
இதை மனதில் வைத்து திமுக அதிகமான தொகுதிகளைக் கொடுக்க யோசித்து வருகிறது. இதனால் அதிருப்தியான காங்கிரஸ் மூன்றாவது அணியாக உள்ள மக்கள் நீதி மய்யத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு கே.எஸ் அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையத்தின் பொது செயலாளர் குமரவேல் காங்கிரஸ் மக்கள் நீதி மையத்தில் நினைத்தால் நல்லது என்று தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மூன்றாவது கட்சியோடு காங்கிரஸ் இணையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.