Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மணிப்பூரில் ஆட்சி காலி…. உரிமை கோரும் காங்கிரஸ்… ஷாக் ஆன பாஜக …!!

பாஜக ஆட்சி நடந்து கொண்டு இருந்த மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இருந்தார்கள். தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை மற்ற கட்சிகள் விலகிக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி இருக்கின்றது., அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான  ஒக்ரம் இபோபி சிங் அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்டுல்லா அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார்.

அந்த கடிதத்தில் நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றோம். ஆட்சி அமைக்க அழையுங்கள் என்று ஒரு கோரிக்கையை வைத்து இருக்கின்றார். அந்த கடிதத்தில் மிகத் தெளிவாக அவருக்கு இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

முன்னதாக  2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களை கைப்பற்றி இருந்தாலும் பெரும்பான்மையான இடங்களை பிடிக்காததால் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்க முடிந்தது. பாஜக அவர்களை விட குறைவான இடங்களை பெற்றிருந்தாலும் கூட நாகாலாந்து மக்கள் முன்னணி மற்றும் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்து அமைத்திருந்தார்கள்.

பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் வழங்குவதாக கூறி கூட்டணி கட்சிகள் முடிவு எடுத்ததால் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கின்றார்கள். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் இந்த ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |