Categories
மாநில செய்திகள்

மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர்… குவியும் பாராட்டு…. வைரலாகும் வீடியோ…!!!

சாலையோர காவலர் ஒருவர் வாகன ஓட்டுனரிடம் மனித நேயத்துடன் நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே இளைஞர்கள் அனைவரும்  பைக்கில் நெடுந்தூரம் பயணம் செய்வது என்றால் மிகவும் விரும்புவார்கள் . அதுமட்டுமல்லாமல் தங்கள்  பயணம் செய்ய தேவையான ரைட்டிங் ஜாக்கெட், கையுறைகள், தரமான ஹெல்மெட் போன்றவற்றை தங்களுடன் எப்போதும்  வைத்திருப்பார்கள். அதன்பிறகு பைக்கில் செல்லும்போதுvlog செய்வதும் பல இளைஞர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதனால் தங்கள் ஹெல்மெட்டில் மேல்புறம் கேமரா ஒன்றை பொருத்தி வைத்திருப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் காவலர்கள் பைக்கில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது சிலர் கடினமாக நடந்து கொள்வதும் உண்டு. அப்போது அந்த கேமராவில் பதிவாகும் வீடியோவை அவ்வப்போது இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த annyarun என்பவருக்கும் பைக்கில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வது பிடிக்கும். அதனால் அவர் கேடிஎம் பைக்கில்  பாண்டிச்சேரியில் இருந்து தென்காசி வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சாலையின் ஓரமாக   நின்றிருந்த காவலர் திடீரென்று அவரை  வழி மறித்துள்ளார் .

அந்த வாலிபர் உடனே பைக்கை நிறுத்தினார்.  அதனால் அந்த காவலர் பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ், போன்ற ஆவணங்கள்  கேட்பார் என்று அவர் நினைத்து  உள்ளார். ஆனால்  அந்த காவலர் நீங்கள் கர்நாடக நாட்டை  சேர்ந்தவரா என்று கேள்வி  கேட்டார் . அதற்கு அந்த வாலிபர் ஆமாம் என்று கூறியுள்ளார் . உடனே அந்த காவலர் அந்த சாலையில் செல்லும் அரசு பேருந்தை காட்டி இது போன்ற அரசு பேருந்து ஒன்று உங்கள் முன்னாடி சென்று கொண்டிருக்கிறதா என்று கேட்டுள்ளார்.அதன்பிறகு அந்தக் காவலர், அரசு பேருந்தில் பயணம் செய்த  ஒரு அம்மா இந்த மருந்து பாட்டிலை தவற விட்டுவிட்டு சென்று விட்டார்.

அதை நீங்கள் பைக்கில் வேகமாக சென்று தர முடியுமா என்று கேட்டுள்ளார்   அந்த பேருந்தில் செல்லும் அந்த அம்மாவிடம் இந்த மருந்து பாட்டிலை கொடுத்து விடுங்கள் என்று கூறினார். அந்த வாலிபர் உடனே அந்த மருந்து பாட்டிலை பெற்றுக் கொண்டு தனது பைக்கில் வேகமாக சென்றார். அப்போது காவலர் சொன்னதுபோலவே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவரிடம் நிறுத்த சொல்லி சைகை காட்டிவிட்டு பேருந்தின் முன்னால் சென்று தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

அதன்பிறகு அந்த வாலிபர் நடந்தவற்றை விளக்கி கூறி தன்னிடம் இருந்த மருந்து பாட்டிலை அந்த அம்மாவிடம் கொடுத்துள்ளார்.மேலும் இங்கு நடந்த அனைத்து சம்பவங்களும் அந்த வாலிபரின் ஹெல்மெட்டில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை அந்த வாலிபர் காவலரின் மனிதநேயத்தை வியந்து பாராட்டி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் காவலரை பலரும்  பாராட்டி வருகிறார்கள் இந்த சம்பவம் பெரும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .

Categories

Tech |