மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சீனாவின் 11 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.
அமெரிக்க அரசு மனித உரிமை மீறலில் அத்துமீறி ஈடுபட்ட 11 சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடையினை விதித்திருக்கின்றது. உய்குர் மக்களினை கொடுமை செய்த காரணத்திற்காக அமெரிக்க அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உய்குர் மக்கள் அனைவரையும் சிறையில் அடைத்தும், கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், அவர்களின் அனுமதி இல்லாமல் தனி தகவல்கள் அனைத்தையும் சேகரிப்பது போன்ற அத்துமீறல்களை சீன அரசானது செய்து கொண்டிருந்தது. இத்தகைய அடக்குமுறைகளை செயல்படுத்த உதவியாக இருந்த 11 சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடையினை சீனா அரசு விதித்திருக்கிறது. பெய்ஜிங் லியுஹே மற்றும் ஸின்ஜியாங் சில்க் ரோட் நிறுவனங்கள் அனைத்தும் உய்குர் மக்களின் மீதான ஜெனடிக் பரிசோதனையினை அரசுக்கு அடையாளம் காட்டுவதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி ஹெபெய் மெய்லிங், ஹெஷியன் ஹாவோலூன் பெயர் அசஸரிஸ், நான் சாங் ஒ பிலிம் டெக், சாங்கி எஸ்குவெல் டெக்ஸ்டைல், கே.டி.கே. குழுமம், ஹெபெய் பிட்லான்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஹெஷியன் டயர்டா அப்பாரல், சினர்ஜி டெக்ஸ்டைல் மற்றும் டான்யுவான் டெக்னாலஜி போன்ற நிறுவனங்கள் அனைத்தும் உய்குர் மக்களை கொடுமை செய்து வேலை வாங்கியுள்ளதாக குற்றங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் உய்குர் மக்களின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளை கண்டித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தனது கருத்தைக் கூறும் போது, சீனாவின் இத்தகைய செயலானது இந்நூற்றாண்டினுடைய மிகப்பெரிய கறை என கடுமையாக விமர்சனம் கூறியுள்ளார். இத்தகைய காரணத்தினால் 11 நிறுவனங்கள் மீது பொருளாதார தடையினை விதித்து அமெரிக்க அரசு செயல்படுத்தியுள்ளது.