ஆந்திர மாநிலத்தில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரெல்லி சாலையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனது வீட்டின் அருகே இடுக்கில் ஒரு கோணிப்பை இருப்பதை பார்த்துள்ளார். அதனை பிரித்து பார்த்தபோது அதில் மனித தலை இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின்னர் அதே இடத்தில் அந்த கோணிப் பையை வைத்துவிட்டு, தனது வீட்டிலிருந்து கவனித்துள்ளார். அப்போது அருகே உள்ள பாழடைந்த வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் ராஜி என்பவர் அதனை எடுத்து செல்வதை பார்த்துள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜுவும் அவருடன் இருந்த ஒரு இளம் பெண்ணும் சாப்பிடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ராஜூவையும் அவருடன் தங்கியிருந்த பெண்ணையும் பிடித்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜீவின் தந்தை இறந்ததால், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அவர் அடுப்பில் சுட்டு சாப்பிட்ட மனித தலை மயானத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதா? இல்லை வேறு யாரையாவது கொலை செய்து கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் அவருடன் இருந்த பெண் யார் என்பது பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.