இன்னும் சிறிது காலம் இவர் உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் மணிவண்ணன் அவர்களின் மகன் மற்றும் மகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1983 ஆம் ஆண்டு ஜோதி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிவண்ணன். பின்னர் 1984 ஆம் ஆண்டு நூறாவது நாள் என்கின்ற ஒரு படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இயக்கம் மட்டுமில்லாது நடிப்பிலும் அசாத்திய திறமை பெற்றவர் மணிவண்ணன். 1989 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கொடி பறக்குது என்ற படத்தில் வில்லனாக நடித்தார். பின்னர் அது 994 ஆம் ஆண்டு வெளிவந்த அமைதிப்படை என்ற ஒரு அரசியல் பலத்தின் மூலம் தனது அரசியல் ஞானத்தையும் வெளிக்காட்டினார்.
மணிவண்ணனுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனின் பெயர் ரகுவரன் இவர் நடிகர் விக்ராந்த் நடித்த கோரிப்பாளையம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார். இவர் மகள் ஜோதி. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தந்தை மணிவண்ணன் குறித்து மகள் ஜோதி கூறியது: “அப்பா இயக்கி வெளிவந்த இரண்டாவது படம் ஜோதி. அந்த படம் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதன் காரணமாக எனக்கு ஜோதி என பெயர் சூட்டினார்.
இயக்குனராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தார். எங்களுடன் நேரம் செலவிட்டது மிகவும் குறைவு. நாங்கள் அடிக்கடி எங்களுடன் இருங்கள் இன்று கேட்கும்போதெல்லாம் ஷூட்டிங் என்று கூறி விட்டு சென்று விடுவார். நேரம் செலவிட முடியாது காரணத்தால் அவர் மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். எங்களோடு அமர்ந்து சாப்பிட முடியவில்லை என்று கூறி என்னிடம் வருத்தம் தெரிவிப்பார். இவர் மகன் 2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த அமரன் படத்தில் சத்யராஜுக்கு மகனாக நடித்திருப்பார். தற்போது தனது அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்தை மீண்டும் இயக்கி வருகிறார்.